Seed Certification
விதை சேமிப்பு :: சேமிப்பு கிடங்கு சுகாதாரம்

சுகாதாரம் : சேமிப்புக் கிடங்கு மற்றும் அதன் பராமரிப்பு

சேமிப்பின் பொழுது விதைகள் அதிக காலம் கடப்பதால் சேதமடைகின்றன. இது மேலும் காலநிலை மற்றும் வெளிப்புற உயிர்க் காரணிகளான பூச்சிகள் மற்றும் நோய் கிருமிகளால் அதிகமாகிறது. விதையினுள் உள்ள நோய்கிருமிகள் மற்றும் சேமிப்புப் பூச்சிகள் அல்லாது பறவைகள் மற்றும் எலிகள் அவற்றின் உணவிற்காக விதைகளைத் தாக்குகின்றன. தூய்மையான விதைக் கிடங்குகள் பூச்சிகளிடமிருந்து விதைகளைக் காக்கின்றன. விதைக்கிடங்கை கட்டும் பொழுது மிகுந்த கவனம் தேவை. கீழ்க்கண்ட கருத்துக்களை கண்காணிக்கவேண்டும்.

  • போக்குவரத்து வசதிகள் நிறைந்த இடத்தில் விதைக் கிடங்கு அமையவேண்டும்.
  • கடலோரங்களில் விதைக் கிடங்குகளை அமைக்கக்கூடாது. ஏனெனில் சுற்றுப்புறக் காற்றின் அதிக ஈரப்பதம் விதையைச் சேதமடையச் செய்யும்.
  • நீர்த் தேங்கும் தாழ்வானப் பகுதிகளில், விதைக் கிடங்குகளை அமைக்கக்கூடாது.
  • சுற்றுப்புற ஈரப்பதம் குறைவாக உள்ள நல்ல காற்றோட்டம், சூரியவெளிச்சம் மற்றும் மேடானப் பகுதிகளில் விதைக் கிடங்குகளை அமைக்கவேண்டும்.
  • காற்றாடிகளைக் கீழ்ப்புறம் வைப்பது நல்ல காற்றோட்ட வசதிக்கு உதவி செய்யும்.
  • நிலத்தடி ஈரப்பதம் தரையில் எட்டுதல் கூடாது.
  • கம்பி வலை சல்லடைகள் கொண்டு எலிகள் நுழையாமல் பாதுகாக்கவேண்டும்.
  • தொழிற்சாலைகளில் அருகாமையில் அமைதல் கூடாது. ஏனெனில் அவற்றின் புகை பாதிப்பை உண்டாக்கும்.
படம் ஆதாரம்: blebirdpestcontrol.com அடுத்து
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016.

Fodder Cholam